search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா கனமழை"

    ஒடிசாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

    இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை பாதிப்பு பகுதிகளில், பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கனமழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் மகாநதி மற்றும் பைடாராணி ஆறுகளில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடுகிறது. எந்த ஒரு அவசரநிலைமையையும் சமாளிக்கவும், கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அம்மநில முதல்-மந்திரி நவின் பட்னாயக் அறிவுறுத்தியுள்ளார்.
    ஒடிசா மாநிலத்தில் கனமழை காரணமாக தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியதையடுத்து, அந்த வழியாக வந்த விரைவு ரெயில் நிறுத்தப்பட்டது. #OdishaRain #ExpressTrainStuck
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் இடைவிடாமல் கனமழை பெய்ததால் கட்டாக், புவனேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் பேரழிவு ஏற்பட்டதையடுத்து, கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் இன்று பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


    இந்நிலையில், ராயகடா மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்டவாளம் தெரியாத அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. புவனேஸ்வர்-ஜகதல்பூர் ஹிராகந்த் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்தில் மழைநீர் சூழ்ந்தது. தொடர்ந்து ரெயிலை இயக்க முடியாததால், ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பரிதவித்தனர். #OdishaRain #ExpressTrainStuck
    ×